அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு வருகை!

0
36

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் (Victoria Nuland) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் இன்று மற்றும் நாளை(23) வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பிராந்திய மற்றும் இருதரப்புக் கொள்கை விவகாரங்களை துணைச் செயலாளர் நுலாண்ட் மேற்பார்வையிடுகிறார்.

குறித்த வருகையின் போது, ​​அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

துணைச் செயலாளர் நுலாண்ட் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று வர்த்தகத்தை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 23 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சில் நடைபெறும் இலங்கை – அமெரிக்க கூட்டாண்மை உரையாடலின் 04 ஆவது அமர்வுக்கு அமைச்சர் பீரிஸ் மற்றும் துணைச் செயலாளர் நுலாண்ட் ஆகியோர் இணைத் தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.