150 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு , இருபுதிய நாணயங்கள் வெளியீடு!

0
38

கொழும்பு பல்ககலைக்கழகத்தின் மருத்துவப் பீடம் மற்றும் இலங்கையில் முதன் முதலில் குடிசனங்கள் மற்றும் வீட்டு வசதிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 150 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு 20 ரூபாய் பெறுமதியான இரண்டு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சந்திரிக்கா எல்.விஜேரத்ன மற்றும் மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் பீ.எம்.ஜீ.அனுரகுமார ஆகியோர், ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதியிடம் இந்த நினைவு நாணயங்களை கையளித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பிரதி ஆளுநர் என்.டி.ஜீ.ஆர். தம்பிக்க நாணயக்கார, நிதி அத்தியட்சகர் கே.எம். அபேகோன் ஆகியோரும் கலந்துக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.