பரீட்சைகளை முன் நியமிக்கப்பட்ட திகதிகளில் நடத்த முடியும்- மேல் மாகாண கல்வி பணிப்பாளர் அறிவிப்பு!

0
430

மேல் மாகாண பாடசாலைகளில் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட பரீட்சைகள் தொடர்பில் மேல் மாகாண கல்வி பணிப்பாளர் ஸ்ரீ லால் நொனிஸ் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி காகித தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளில் உள்ள 9, 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகளை முன் நியமிக்கப்பட்ட திகதிகளில் நடத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பரீட்சை வினாத்தாள்களை, அச்சிடுவதற்கு தேவையான காகிதங்கள் வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 9 மற்றும் 10ஆம் தரங்களுக்கான வினாத்தாள்கள் வலய மட்டத்தில் அச்சிடப்படவுள்ளன.

அத்துடன் 11ஆம் தரத்திற்கான வினாத்தாள்கள் மேல் மாகாண திணைக்களத்தில் அச்சிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி முன்னர் தீர்மானிக்கப்பட்ட வகையில் எதிர்வரும் 29ஆம் திகதி தவணை பரீட்சை நடத்தப்படவுள்ளது. அத்துடன் 6, 7 மற்றும் 8ஆம் தரங்களுக்கான தவணை பரீட்சைகள் பாடசாலை மட்டத்தில் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.