உள்நாட்டு பால்மா உற்பத்திகளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் !

0
204

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், எரிவாயு மற்றும் மருந்து போன்ற பொருட்களுக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில் தற்பொழுது உள்நாட்டு பால் மா உற்பத்திகளுக்காகவும் மக்கள் கடைகளில் நீண்ட வரிசைகளில் நின்று கொள்வனவு செய்து வருகின்றனர்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையால் உள்நாட்டு பால்மா உற்பத்திகளுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கொள்வனவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பால்மா விலை அதிகரிப்பால் பசும்பாலை அதிகம் கொள்வனவு செய்வதாகவும் தெரியவருகின்றது.

டொலரிற்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையால் இறக்குமதி செய்யப்படும் 400கிராம் பால் மா ஒன்றின் விலை 250 ரூபாவால் உயர்வடைந்தது.

இதன்படி, 400கிராம் பால் மா ஒன்றின் புதிய விலை 600 ரூபா ஆகும்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு நிலவும் அதேவேளை உள்நாட்டு உற்பத்திகள் அனைத்தும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் மக்கள் வரிசைகளில் நின்று கொள்வனவு செய்து வருகின்றனர்.