கொழும்பு துறைமுகத்தில் ஆறு நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல்

0
328

20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 20,000 மெற்றிக் தொன் விமானங்களுக்கான எரிபொருளை ஏற்றி வந்துள்ள கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே ஆறு நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது.

அந்த கப்பலில் இருந்து எரிபொருளை இறக்குவதற்கு தேவையான டொலர்கள் வழங்கப்படாததே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

கப்பலின் எரிபொருளுக்காக செலுத்த வேண்டிய 42 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை எரிசக்தி அமைச்சினால் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

தேவையான அளவு டொலர்களை தனியார் வங்கிகளிடம் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ள போதிலும், நாட்டின் முன்னணி தனியார் வங்கிகள் கூட தேவையான அளவு டொலர்களை வழங்க முடியாது என கைவிரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் எரிபொருள் நெருக்கடி இல்லை என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக ஒரே நேரத்தில் சுமார் நான்கு எரிபொருள் கப்பல்களில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டுமென எரிசக்தி அமைச்சு தெரிவிததுள்ளமை குறிப்பிடத்தக்கது.