மன்னாரில் கேரளா கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது!

0
38

சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான 175 கிலோ கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களையும் டிங்கி படகு ஒன்றையும் சிறிலங்கா கடற்படையினர் இன்று (18) கைது செய்துள்ளனர்.

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 33 மற்றும் 34 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வங்காலைப்பாடு மற்றும் உதயபுரம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.