சிறிலங்கா வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் சீன தூதர்!

0
44

இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸைச் சந்தித்தார்.

அண்மையில் முடிவடைந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவிய பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஆதரவை இரு முக்கியஸ்தர்களும் வெகுவாகப் பாராட்டியதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.