இலங்கையின் பல்வேறு இடங்களுக்கும் வானிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் 18 மாவட்டங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடுமையான இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இதன்படி, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, மாத்தளை, குருநாகல், கண்டி, கேகாலை, நுவரெலியா, கம்பஹா, பதுளை, அம்பாறை, கொழும்பு, மொனராகலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் அனர்த்தங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது திறந்தவெளி பகுதிகளான நெல் வயல்கள், தேயிலை தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளி நீர்நிலைகள் போன்றவற்றை தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.