“கொலைகார சர்வாதிகாரி” புடின் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சனம்

0
527

உக்ரைன் ரஷ்யா இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில், மார்ச்18ம் திகதி வெள்ளிக்கிழமையான இன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீன ஜனாதிபதி ஜிங்பிங்கை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேச உள்ளார்.

உக்ரைன் மீதான போரை நிறுத்துவது குறித்து நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஓரளவு சமாதான தீர்வுகள் எட்டப்பட்டு இருப்பதாக இருநாட்டு தலைவர்களும் தெரிவித்து இருந்த போதிலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இன்னுமும் தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்காவின் மாநிலங்களின் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்வதற்காக வரும் வாரத்தில் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஆண்டனி பிளிங்கன், உக்ரைனில் ரஷ்யாவிற்கு ராணுவ உதவிகளை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாகவும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் சீனா பெறுப்பேற்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை “கொலைகார சர்வாதிகாரி” என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் விமரிசித்து இருந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளைமாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்றுவரும் பதற்றமான சூழ்நிலை குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்யுடன் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் மார்ச் 18ம் திகதி வெள்ளிக்கிழமையான இன்று GMT 13:00 மணிக்கு தொலைப்பேசி வாயிலாக பேசுவார்கள் என தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்தையானது, சீன வெளியுறவு துறை அதிகாரி ஒருவர், ரஷ்யா தூதரை சந்தித்து பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து சந்தித்து கொண்டதை தொடர்ந்து நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை கண்டிக்கவோ, படையெடுப்பு என்று விமர்ச்சிகவோ செய்யாத சீனா, உக்ரைனின் இறையாண்மை பாதுகாக்க படவேண்டும் என்ற தனது முழுமையடையாத கருத்தை மட்டுமே தெரிவித்துள்ள நிலையில் சீன ஜனாதிபதியுடனான அமெரிக்க ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.