ரஷ்ய ராணுவத்தை குறி வைத்து தாக்கும் உக்ரைன்! வைரல் ஆகிவரும் வீடியோ ஆதாரம்

0
28

உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய துருப்புகளை உக்ரைன் ராணுவத்தினர் தேடி தேடி வேட்டையாடும் வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

உக்ரைன் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது தொடர்ந்து 20வது நாளாக போர் தொடுத்து வருகிறது.

உக்ரைனின் பெரும்பாலான முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் குறிவைத்து தாக்கி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் நிலையில், உக்ரைன் ராணுவத்தின் கடுமையான எதிர் தடுப்பு தாக்குதலால் தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் கைப்பற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.