புத்தளம் குளத்தில் மீட்கப்பட்டுள்ள சடலம்!

0
30

புத்தளம் பிரதேசத்தில் உள்ள குளத்திலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளத்தில் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

புத்தளம் மஹகும்புக்கடவல ஹொரகஹயாய பகுதியிலுள்ள குளமொன்றிலிருந்தே நேற்றிரவு சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், படபொல, கிதுல்கஹகல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆனமடுவ பதில் நீதவான், மரண விசாரணையை முன்னெடுத்ததுடன் , சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மஹகும்புக்கடவல காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்