கனடாவில் உள்ள பூங்காவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த நிலை! கைது நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ்

0
27

கனடாவில் உள்ள பூங்காவில் பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் உள்ள High Parkல் தான் இச்சம்பவம் திங்கட்கிழமை நடந்துள்ளது. நேற்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பூங்காவில் இருந்த பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக பொலிசார் விசாரணையில் இறங்கினார்கள்.பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து பூங்காவானது தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர் மீண்டும் திறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.