என்னது வர்ணனையாளரா? சுரேஷ் ரெய்னா

0
31

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக கருத்தப்பட்டவர் சுரேஷ் ரெய்னா. பல போட்டிகளை கைப்பற்றுவதற்கு முக்கிய பங்கினை ஆற்றிய சுரேஷ் ரெய்னா 2 ஆண்டுகளுக்கு முன் வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கி வந்தனர்.

இதனால் முன்னாள் இந்திய கேப்டன் எம் எஸ் தோனியின் ஓய்விற்கு பிறகு தானும் ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்து ஷாக் கொடுத்தார். சர்வதேச போட்டியில் தான் சுரேஷ் ரெய்னா எம் எஸ் தோனி ஓய்வினை அறிவித்தனர்.

ஆனால் ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்தனர். ஐபிஎல் போட்டியின் மிஸ்டர் ஐபிஎல் சின்னதல என்று அனைவராலும் சுரேஷ் ரெய்னா அழைக்கப்பட்டு வந்தார். தற்போது ஆரம்பிக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் எந்த அணியினராலும் ஏலம் எடுக்கப்படாமல் சோல்ட் அவுட் ஆனால். கடந்த பல ஆண்டுகளாக ஆடிவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூட அவரை ஏலத்தில் எடுக்காமல் அதிர்ச்சியை கொடுத்தனர்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டியின் வர்ணனையாளராக நியமிக்கப்பட்டுள்ளாராம். அவருடன் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பல ஆண்டுகளுக்கு பிறகு வர்ணனையாளராக பணியாற்றவிருக்கிறாராம்.

இந்தி மொழியில் இருவரும் போட்டியினை வழிநடத்தவுள்ளது ரசிகர்களுக்கு சிறிது ஆறுதலாக இருக்கிறது என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.