மருந்துப் பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலைகளில் அதிகரிப்பு!

0
387

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைகள் 29% அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மருந்து நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், இன்று முதல் பிரதான மருந்தகங்களுக்கு மருந்து மற்றும் உபகரணங்களை விநியோகிக்க தீர்மானித்துள்ளனர்.

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கன்கந்த இதனை தெரிவித்தார்.

விட்டமின்கள் போன்ற கட்டுப்பாடற்ற மருந்துப் பொருட்கள் நேற்று முதல் 29% அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் 60 மருந்து வகைகள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஏற்கனவே மருந்துகள் தொடர்பான வர்த்தமானி வெளியிடும் வரை மருந்து நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மருந்தகங்களுக்கு மருந்து வழங்குவதை நிறுத்தியிருந்தனர்

இதேவேளை வர்த்தமானி மூலம் 40% மருந்துகள் கட்டுப்படுத்த முடியாத பொருட்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, கட்டுப்படுத்த முடியாத மருந்துகளின் விலையை அதிகரிக்க சிறப்பு அனுமதி தேவையில்லை..

இதன் விளைவாக, Paracetamol, Beclometasone (inhalation capsule), Salbutamol, Omeprazole, Methylprednisolone, Domperidone, Ceftazidime Injection, Regular Insul, Biphasic Isophane Insul, and Amoxicillin/Clavulanic acid போன்ற மிகவும் முக்கிய மருந்து வகைகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.