யாழ்-ஊர்காவற்றுறையில் ஹெரோயினுடன் மூவர் கைது

0
33

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் நாரந்தனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், சந்தேகநபர்களிடமிருந்து 550 மில்லிகிராம், 80 மில்லிகிராம் மற்றும் 50 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.