தொடரூந்து திணைக்களத்திற்கு 4 பில்லியன் இழப்பு! கட்டணம் மாற்றியமைக்க முடிவு?

0
38

தொடருந்து திணைக்களத்திற்கு வருடாந்தம்  நான்கு பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் திலும் அமுனுகம( Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பழைய கட்டணங்களில் தொடருந்து சேவையை வழங்குவது கடினம் என்றும் அவர் கூறினார்.

தொடருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக இன்று புதன்கிழமை குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் நாட்டின் பல திணைக்களங்கள் மற்றும் துறைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.