தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் மெல்போர்னில் வசித்து வந்த தமிழ் அகதி மரணம்

0
412

மெல்போர்ன் Thomastown-ஐச் சேர்ந்த தனேஸ்குமார் புத்திசிகாமணி (வயது 35) என்ற இளைஞர் இன்று காலை மன அழுத்தம் காணரமாக மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தனேஸ்குமார் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் மெல்போர்னில் வாழ்ந்துவந்ததாகவும், உற்பத்தி துறையில் பணிபுரிந்தும் வந்துள்ளார். 

கொரோனா பரவலையடுத்து இவர் வேலையை இழந்துள்ளார். மேலும் நீண்ட நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்தும் இருந்துள்ளார்.  

இந்நிலையில் இவர் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டு இருந்தமை காரணத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.  

மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட இவர் இன்று இறந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார். 

மேலும் கடந்த சில மாதங்களுக்குள் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மத்தியில் இவ்வாறான பல மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அரசின் இறுக்கமான அகதிகள் கொள்கை அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துவருவதாகவும் திரு.அரன் மயில்வாகனம் குற்றம்சாட்டியுள்ளார்.

 இதேவேளை தனேஸ்குமாரின் இறுதிநிகழ்வுகளை நடத்துவதற்கான நிதிசேகரிப்பில் தமிழ் ஏதிலிகள் கழகம் ஈடுபட்டுள்ளதாகவும் திரு.அரன் மயில்வாகனம் கூறியுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கதாகும்.