சம்மர் தொடங்கிடுச்சு.. இப்போதிலிருந்தே இந்த 10 விஷயங்களை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுடுங்க..!

0
498

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சருமத்தை அதற்கு ஏற்ப பாதுகாப்பது அவசியம். அதற்கு முதலில் உங்கள் சருமப் பராமரிப்பு பொருட்களை மாற்றியாக வேண்டும்.

ஒவ்வொரு பருவநிலைக்கு ஏற்ப நம் சருமத்திற்கும் பராமரிப்பும், கவனிப்பும் தேவைப்படுகிறது. இல்லையெனில் சருமச் சேதாரம், ஒவ்வாமை ஏற்படலாம். அந்த வகையில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சருமத்தை அதற்கு ஏற்ப பாதுகாப்பது அவசியம். அதற்கு முதலில் உங்கள் சருமப் பராமரிப்பு பொருட்களை மாற்றியாக வேண்டும். கோடைக்காலத்திற்கு ஏற்ற கிரீம் வகைகளை பயன்படுத்துவது அவசியமாகிறது. அந்த அவகையில் கோடைக்காலத்திற்கு ஏற்ப சருமத்தை பராமரிக்க நீங்கள் இப்போதிலிருந்தே தயாராக 10 விஷயங்களை தொகுத்துள்ளோம்.

*முதலில் மாற்ற வேண்டியது கிளென்சர்: கோடைக்காலத்தில் அதிக வியர்வை உண்டாகும். மேலும் சூடான மற்றும் ஈரப்பதமான வானிலையை எதிர்த்துப் போராடுவதற்கு சருமத்தில் அதிக எண்ணெய் சுரக்கும். எனவே, நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு பொருத்தமான ஜெல் அல்லது நீர் சார்ந்த நுரை (எண்ணெய் சருமம் இருந்தால்) அல்லது நுரை அல்லாத (வறண்ட மற்றும் காம்பினேஷன் சருமத்திற்கு) கிரீம்களை பயன்படுத்த வேண்டும். உங்கள் க்ளென்சர் ஆல்கஹால் இல்லாததாகவும் மற்றும் pH சமநிலையிலும் இருக்க வேண்டும். ஃபேஷியல் க்ளென்சரைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி, கிளென்சர் பயன்படுத்துவதற்கு முன் ஒரு நிமிடம் முகத்தில் தண்ணீர் தெளித்து மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.

*சீரம் மற்றும் மாய்ஸ்சரைசருக்கு முன் ஃபேஸ் மிஸ்ட் பயன்படுத்தவும்: ஃபேஸ் மிஸ்ட் முகத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், உடனடி புத்துணர்ச்சிக்கும் உதவுகிறது. இதனால் சருமம் பளபளப்பாக இருக்கும். ஃபேஸ் மிஸ்ட் பயன்படுத்தும்போது முகத்தில் இருந்து சுமார் 8 அங்குல தூரத்தில் வைத்து தெளிக்கவும்.

*டோனர் மற்றும் மாய்ஸ்சரைசர் : இந்த கோடையில் உங்கள் சருமத்திற்கு எண்ணெய் இல்லாத மற்றும் லேசான சீரம் மற்றும் மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துங்கள். உட்புற பளபளப்பிற்கு ஒரு சீரம் மற்றும் நீரேற்றத்திற்கு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இவை உங்கள் துளைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்தையும் அளிக்கும்.

*உங்கள் தோல் பராமரிப்பிற்கு ஆன்டிஆக்ஸிடன்ட் : ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்து ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. வைட்டமின் சி சீரம் அல்லது கிரீம்கள் சூரியனால் ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலாஜனை அதிகரிக்கின்றன மற்றும் முன்கூட்டிய வயதைத் தடுக்கின்றன. உங்கள் தினசரி உணவில் பச்சை இலைக் காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் ஆக்ஸிஜனேற்றமாக இருக்கும்.

*அடிக்கடி ஹைட்ரேட் செய்யுங்கள்: சருமத்தை உள்ளே ஈரப்பதமாக்குவது ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்துக்கொள்ள உதவும். சருமத்தில் ஈரப்பதத்தை மீட்டெடுக்க பல வழிகள் உள்ளன. அதில் முதல் விஷயம் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிக்க வேண்டும். மற்ற வழிகள் பகலில் ஹைட்ரேட்டிங் ஹைலூரோனிக் சீரம், இரவில் ஈரப்பதம் அல்லது ஜெல் அடிப்படையிலான ஷீட் மாஸ்க் ஆகியவை சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. பகலில் வெளியே செல்வோர் எனில் ஃபேஸ் மிஸ்ட் பயன்படுத்தலாம்.

*எக்ஸ்ஃபோலியேட் செய்ய மறக்காதீர்கள் : வாரத்திற்கு இரண்டு முறை லைட் ஸ்க்ரப் செய்வது அவசியம். சருமத்தின் இறந்த செல்களை அகற்றவும், துளைகளை சுத்தம் செய்யவும், சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் இது அவசியம். எக்ஸ்ஃபோலியேட் செய்யும் போது உதடுகள், கழுத்து மற்றும் மார்பின் மேல் பகுதிகளையும் தவறவிடாதீர்கள்.

*சன்ஸ்கிரீனைத் தவிர்க்காதீர்கள் : கோடையில் புற ஊதா கதிர்கள் கடுமையாக இருக்கும். அவற்றிலிருந்து ஏற்படும் சேதம் பழுப்பு நிறத்தில் மட்டுமல்ல, அவை நிறமி, சீரற்ற அமைப்பு, நேர்த்தியான கோடுகள், வயது புள்ளிகள், மந்தமான தோல் மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்துகின்றன. எனவே, 40 SPF பரந்த-ஸ்பெக்ட்ரம் கொண்ட சன்ஸ்கிரீன் அனைத்து தோல் வகைகளுக்கும் அவசியம். நீங்கள் வீட்டிற்குள் இருக்கும்போதும் சன்ஸ்கிரீன் தேவை.

*மிதமான மேக்கப் போதுமானது : ஈரப்பதம் மற்றும் வெப்பம் சருமத்தை பெரிதும் பாதிக்கும் என்பதால், மேக்கப் அதிகமாக அப்ளை செய்வது சருமம் சுவாசிப்பதைத் தடுக்கிறது. எனவே, அதிக மேக்அப் பொருட்களை முகத்தில் அடுக்கிக்கொண்டே போகாமல் மிதமான மேக்அப்பை அப்ளை செய்யுங்கள்.

*இரவு நேர சருமப்பராமரிப்பு முக்கியமானது: கோடைக்காலத்தில் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிப்பதில் எப்போதும் கவனம் செலுத்துங்கள். படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு நல்ல நைட் ஆயில் அல்லது நைட் கிரீம் பயன்படுத்தவும். இரவில் சரும செல்கள் புத்துயிர் பெற சில நல்ல ஓவர் நைட் மாஸ்க்குகளையும் தேர்வு செய்யலாம்.

*கண்கள், பாதங்கள் மற்றும் உதடுகளை புறக்கணிக்காதீர்கள் : போதுமான பாதுகாப்பிற்காக ஒரு நல்ல கண் ஜெல் மற்றும் சூரிய பாதுகாப்பு லிப் பாம் ஆகியவற்றில் முதலீடு செய்யுங்கள். உங்கள் கால்களிலும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

கோடையில் சருமத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், அதிகமாக வெளியே செல்வதை தவிருங்கள். உங்கள் சருமத்தின் இயற்கையான சமநிலையையும் நல்ல ஆரோக்கியத்தையும் மீட்டெடுப்பதற்கான ஒரே வழி சருமத்தை நன்கு கவனித்துக்கொள்வதுதான்.