இலங்கையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக நடைமுறைக்கு வந்துள்ள புதிய திட்டம்!

0
440
vasudeva-industrial-services-verna-goa-security-services-yd7vc

இலங்கையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தொழிலாளர் துறை மற்றும் தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை பதிவு செய்யும் வகையில் இணைய முகவரியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி https://cms.labourdept.gov.lk/ என்ற இணைய முகவரி மூலம் பணியாளர்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைய முகவரியின் ஊடாக சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பணியாளர்களின் பிரச்சினைகளை பதிவு செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.