நேட்டோ பகுதியில் அத்துமீறிய ரஷ்ய ஆளில்லா விமானம்: பதற்றத்தை அதிகரித்த புடின்

0
359

போலந்து வான்வெளியில் அத்துமீறிய ரஷ்ய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

குறித்த ஆளில்லா விமானமானது நேட்டோ நாடுகளின் எல்லையை மீறி போலந்துக்கு மேல் பறக்கும் முன்னர் உக்ரேனிய நகரமான யாவோரிவ் மீது முதலில் வட்டமிட்டதாக கூறப்படுகிறது.

35 பேர் கொல்லப்பட்ட ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பின்னர் இராணுவத் தளத்திற்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்வதற்காக புடின் நிர்வாகம் ஆளில்லா விமானத்தை அனுப்பியிருக்கலாம் என கருதுவதாக உக்ரேனிய ஆயுதப் படைகள் தெரிவித்தன.

தொடர்ந்து குறித்த ஆளில்லா விமானம் போலந்துக்கு பறந்ததாகவும், மீண்டும் உக்ரைன் திரும்பிய நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த தயக்கமும் இன்றி போருக்கு தூண்டும் முயற்சியை ரஷ்யா ஈடுபட்டு வருவதாகவும், தற்போது நேட்டோ உறுப்பு நாடு ஒன்றில் அத்துமீறி நுழைந்துள்ளதாகவும் உக்ரேனிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று அதிகாலையில், சுமார் 5.45 மணியளவில் போலந்து எல்லைக்கு 12 மைல் தொலைவில் உக்ரைன் மீது கொடூர தாக்குதலை முன்னெடுத்தது ரஷ்யா. இதில் 35 பேர்கள் கொல்லப்பட்டதுடன், 134 பேர் காயங்களுடன் தப்பினர்.

ரஷ்ய தரப்பில் இருந்து மொத்தம் 6 விமானங்களில் இருந்து 30 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கையானது நேட்டோ நாடுகளை தூண்டிவிட்டு, போருக்கு கட்டாயப்படுத்துவதாகவே கூறப்படுகிறது.