தோனியின் ஓய்வு முடிவு எப்போது? CSK அணி நிர்வாகம் அறிவுப்பு

0
448

ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெறுவது தொடர்பிலான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 15வது சீசனின் போட்டிகள் வரும் மார்ச் 26ம் திகதி முதல் தொடங்குகிறது.ஆனால் சென்னையில் தனது கடைசி போட்டியை விளையாட விரும்புவதாக தெரிவித்திருந்தார். எனினும் இந்தாண்டு மும்பை, புனே நகரங்களில் மட்டுமே போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்தாண்டே தோனியின் பேட்டிங் ஃபார்ம் முடிந்துவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் 16 போட்டிகளில் விளையாடி 114 ரன்களை மட்டுமே அடித்து மோசமாக விளையாடியிருந்தார் தோனி.

இதனால் தோனி இந்தாண்டு தனது ஓய்வை அறிவித்துவிடுவது தான் சிஎஸ்கே அணிக்கு செய்யும் மிகப்பெரிய நல்லது என வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இது தொடர்பில் பதிலளித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அதிகாரி கூறுகையில், ஓய்வு பெறுவது குறித்த இறுதி முடிவை தோனியே எடுப்பார். நாங்கள் எந்தவித அழுத்தமும் தரமாட்டோம். ஏனென்றால் அவர் எங்களுக்கு பல ஆண்டுகளாக விளையாடியுள்ளார்.

இதுகுறித்த முடிவை எங்களுக்கு தெரிவித்தவுடன் ரசிகர்களுக்கும் அறிவிக்கப்படும். அடுத்த கேப்டனை முடிவு செய்யும் பேச்சுக்கே தற்போது இடமில்லை. அந்த நிலையை நாங்கள் இன்னும் விவாதிக்கவில்லை என கூறியுள்ளார்.