ஒன்ராறியோவில் பாடசாலைகளை திறப்பது குறித்து டுவிட்டரில் தகவலை பதிவிட்ட கல்வி அமைச்சர்!

0
665

ஒன்ராரியோவின் அனைத்துப் பிராந்தியங்களிலும் உள்ள பாடசாலைகளை எப்போது மீளத் திறப்பது என்று மாகாண அரசாங்கம் நாளை அறிவிக்கவுள்ளது.

இதுதொடர்பாக, கல்வி அமைச்சர், ஸ்டீபன் லெக்கி தமது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி இந்த விடயத்தில் முடிவு செய்வார். எல்லா பிராந்தியங்களிலும் உள்ள அனைத்து மாணவர்களும் மீண்டும் வகுப்புக்கு வர விரும்புகிறோம்.

புதன்கிழமை மீண்டும் திறப்பதற்கான திகதிகளை அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.