இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
1078

(Today Horoscope 2-2-2021)

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

இன்று சார்வாரி வருடம், தை மாதம் 20ம் நாள், ஜமாதிஸானி 19ம் நாள், 1-2-2021 செவ்வாய்க்கிழமை, பஞ்சமி மாலை 6.32 வரை. ஹஸ்தம் காலை 0.44 மணிவரை தியாஜ் 8.33 சித்தயோகம்.

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

* நல்ல நேரம் : காலை 7.30 மணி – 8.30  மணி மாலை 4.30 – 5.30 மணி
* ராகு காலம் : மாலை 3.00 – 4.30 மணி
* எமகண்டம் : காலை 9.00 – 10.30 மணி
* குளிகை : காலை 12.00 – 1.30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்

மேஷம்:

அமோகமான நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

ரிஷபம்:

கனவு நனவாகும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வேற்று மதத்தவர்கள் நண்பர்களாவார்கள்.

மிதுனம்:

தேவைகள் பூர்த்தியாகும் நாள். எதிர்ப்புகள் அடங்கும்.. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.

கடகம்:

வெற்றிக்கு வித்திடும் நாள். சொத்து சம்பந்தமான பிரச்னைக்கு நல்லதீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வேற்று மதத்தவர்கள் நண்பர்களாவார்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள்.

சிம்மம்:

அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். அழகும் இளமையும் கூடும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

கன்னி:

வேலைச்சுமை மிகுந்த நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

துலாம்:

அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.

விருச்சிகம்:

சிறப்பான நாள். எதிர்பார்ப்புகள் உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நிறைவேறும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

தனுசு:

முயற்சிகள் பலிதமாகும் நாள். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள்.

மகரம்:

திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சினைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.

கும்பம்:

சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். உறவினர் முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள்.

மீனம்:

எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதரவு கிட்டும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.