ஸ்பெயினில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

0
544

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது.

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள

பட்டியலில் ஸ்பெயின் 7-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்து 52 ஆயிரத்து 729 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 59,081 ஆக உயர்ந்துள்ளது.