ஜேர்மன் மக்களுக்கு முக்கிய வாக்குறுதி அளித்த சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல்!

0
1127

செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து ஜேர்மன் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என ஜேர்மன் சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல் உறுதியளித்துள்ளார்.

ஜேர்மனியில் இதுவரை அதன் மக்கள்தொகையில் 3 சதவீதம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஒவ்வொரு 100 பேரில் 3 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது.

இந்த நிலையில், ஜேர்மன் தலைவர் ஏஞ்சலா மெர்கல் திங்கட்கிழமை அன்று மருதத்துவ நிர்வாகிகள், அமைச்சர்கள், நாட்டின் 16 மாநில தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய ஆணையத்துடன் நாட்டில் தடுப்பூசி போடுவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, இதுவரை தாமதங்கள் இருந்த போதிலும், இனி புதிய தடுப்பூசிகள் அங்கிகரிக்கப்படாவிட்டாலும், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் போதுமான தடுப்பூசிகளை தயாரிக்க வழிவகுக்கும் என்று ஏஞ்சலா கூறினார்.

2021 செப்டம்பர் இறுதிக்குள் ஜேர்மனியின் குடிமக்கள் அனைவரும் தங்கள் முதல் தடுப்பூசி ஷாட்டை பெறுவார்கள் என்று வாக்குறுதி அளித்தார்.

மேலும், இலக்கை அடைய பணத்துக்கோ அல்லது அர்ப்பணிப்புக்கோ பற்றாக்குறை இருக்காது என்று அவர் கூறினார்.