கூந்தல் உதிர்வை தடுக்கணுமா? வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினாலே போதும்

0
570

இன்றைகால காலத்தில் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, இருவருக்கும் இருக்கின்ற ஒரே பிரச்சனை முடி உதிரும் பிரச்சனை தான்.

தலை முடி உதிர்வதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், முறையற்ற உணவு முறை, ஒழுங்கற்ற பராமரிப்பு, உடல் உஷ்ணம் என பல காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

இருப்பினும் தலை முடியை ஒழுங்காக பராமரித்து வந்தாலே முடி உதிர்வு பிரச்சனை குறைந்து முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

இதற்கு கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை தான் வாங்கிப்போட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை கூட வைத்து முடி உதிர்வை சரி செய்யலாம்.

அதில் வெந்தயம் முடி உதிர்வு பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகின்றது. ஏனெனில் வெந்தயத்தில் நிக்கோடனிக் அமிலம், ப்ரோடீன் சத்துக்கள் அடங்கியுள்ளது.

அந்தவகையில் தற்போது இதனை எப்படி முடி உதிர்விற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வெந்தயம் – 10 ஸ்பூன் (ஊற வைத்தது)
வைட்டமின் இ கேப்ஸுல் – 1
விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்
செய்முறை

முதலில் ஒரு பவுலில் 10 ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து 5 அல்லது 6 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளவேண்டும்.

அடுத்து ஊறிய வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். மிக்ஸி ஜாரில் அரைத்ததை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.

வடிகட்டி எடுத்து கொண்டதில் வைட்டமின் இ கேப்சுளை ஒன்று சேர்த்துக்கொள்ளவும். வைட்டமின் இ கேப்ஸுல் இல்லாதவர்கள் தேங்காய் எண்ணெயை 1 ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் சேர்க்கலாம்.

அடுத்து 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கவும். குளிர்ச்சி தன்மை உள்ளவர்கள் இதை தவிர்த்து கொள்ளலாம். இப்போது சேர்ந்த எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்யவும். இதை தனியாக ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலையில் அப்ளை செய்யவேண்டும்.

முக்கியமாக இரவு நேரத்தில் மட்டுமே இதை தடவ வேண்டும். காலையில் ஷாம்பு போட்டு தலையை வாஷ் செய்துகொள்ளலாம்.

இந்த முறையை வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால் போதும் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது.