மூங்கில் நெல் பற்றி அறிந்ததுண்டா? பல சுவரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்!

0
346

திருமணத்தின் போது மணமக்களை வாழ்த்துபவர்கள் “ஆல் போல் தத்து அருகது போல வேரோடி, மூங்கில் போல் சுற்றம் முசியாமல்” என வாழ்த்துவர்.

அந்தளவிற்கு தன் இனத்தோடு பலஆண்டுகள் இணைந்து கணுக்கணுவாய் தோன்றி வளரக் கூடியது மூங்கில் மூங்கிலானது தொடர்ந்து வேரிலிருந்து கன்று தோன்றி வளர்ந்து வளர்ந்து பல தலைமுறை தாவரங்களும் புதராக ஒன்றாக இருக்கும். இது நூறு அடி உயரம் வளரக்கூடிய பல பருவப் புதர் மரம்.

மூங்கில் அரிசி என்பது காடுகளில் வளர்கின்ற மூங்கிலின் பூ பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் அரிசியாகும். மூங்கில் அரிசி ஆனது அதிகமான ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்களை கொண்டது. மூங்கிலில் இருந்து சேகரிக்கப்படும் அரிசி மிக குறைந்த அளவிலேயே கிடைக்கும்.

மூங்கில் மரம் 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். இந்த மூங்கில் பூவிற்குள் அரிசி இருக்கும். இந்த பூ பூத்த பின்னர் அந்த மூங்கில் மரம் பட்டுவிடும்.

நாம் வளர்க்குற மரங்கள் பூத்து, காய்க்கிறத பாத்திருக்கோம். ஆனா மூங்கில் மரம் பார்த்திருந்தாலும் அது பூ பூத்ததை பார்த்ததில்லை. மூங்கிலில் பூ, காய் அப்படி நினைச்சுகூட பாத்ததில்லை. மூங்கில் கொம்பு, பாய், அரிசி, காகிதம் என பல பயன்கள் மூங்கில்கள் மூலம் கிடைக்கின்றன.

நீண்ட ஆண்டுகள் வளர்ந்த மூங்கில் மரங்களில் மட்டுமே பூக்கள் பூக்கும். அதிலிருந்து மட்டுமே மூங்கில் அரிசியை சேகரிக்க முடியும். காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த சத்துக்கள் நிறைந்த மூங்கில் அரிசியும் முக்கியமான காரணம்.

மூங்கில் அரிசி உயரமான மூங்கில் மரங்களில் இருந்து தானாகவே பூமியில் விழும். அவை சேகரிக்கபட்டு விற்பனைக்கு வருகிறது. இயற்கையின் அருட்கொடையால் பூமிக்கு வரும் மூங்கில் அரிசி உன்னதமானது.

மூங்கில் அரிசியை – புட்டு போல – மூங்கில் குழாயில் வேகவைத்து, எலுமிச்சம்பழச்சாறு + இறால் அவியலோடு – தாய்லாந்தில் செய்கிறார்கள். மூங்கில் பூ பூத்தால் அந்த வருடம் துரதிஷ்டம் அல்லது அத்தவருடம் வெள்ளாமை சரியாக இருக்கது என்ற நம்பிக்கை பல இடங்களில் இருக்கிறது.

உண்மையில் அதற்கான காரணம் மூங்கில் அரிசி என்றால் எலிகளுக்கு ரொம்ப ஆசை. அதை உண்ண சுற்று வட்டார எலிகளெல்லாம் அங்கே குடி பெயர்ந்துவிடும். மூங்கில் அரிசி தீரும் வரை அங்கேயே குடும்பத்தை பெருக்கும்.

மூங்கில் அரிசி தீர்ந்துவிட்டால் அப்போது பல மடங்காக பெருகி இருக்கும் எலிக்கூட்டம் சுற்றுவட்டார விவசாயநிலங்களுக்குத்தான் படையெடுக்கும். அப்போது கண்டிப்பாக அந்த வருட விவசாயம் வழக்கத்தை விட அதிக சேதாரத்தைத்தான் சந்திக்கும்.

எலும்புகளை வலுவாக்கும்

இலைச்சாறு பால் உணர்வு ஊக்குவியாக கருதப்படுகிறது. இளங்கன்றுகள் மயக்கம், பித்தம் போக்கி ஜீரணத்தினைத் தூண்டும். கிருமிகளினால் தாக்கப்பட்டு சீழ்பிடித்த காயங்களுக்கு பற்றாக பூசப்படுகிறது. இதன் சாறு சிலிக்காவினை அதிக அளவில் கொண்டுள்ளது. குருத்து எலும்புகளுக்கு வலுவு தரும். வலுவு இழந்த எலும்புகளை குணப்படுத்தும்.

வயிற்றுப்புழுக்களை கொல்லும்

வேர் தசையிருக்கி, குளிர்ச்சி தரும். மூட்டு வலி மற்றும் பொதுவான பலவீனத்தைத் தசை சரிவு வலியினை தடுக்கும். மாதவிடாயின் போது ஏற்படும் வலி போக்கும். வயிற்றில் உள்ள புழுக்களைப் போக்கி வயிற்றினை வலுப்படுத்தும்.

மூங்கில் நெல்

மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்குமாம். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த நெல்லினை வேக வைத்து உண்பதால் அவர்களின் உடல் வலிமையாக உள்ளது. 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும்.

கருத்தரித்த பெண்களுக்கு சிறந்தது

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டது. எனவே கர்ப்பமான பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிட செய்யலாம்.

உடல் பலம் பெறும்

மூங்கில் அரிசியை சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் வலு பெரும். இது உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும்.

மூங்கில் அரிசியின் பயன்கள்

மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவை குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.