புதியப் பாதிப்புகள் குறைந்துவிட்டன, அவசரப்பிரிவில் நோயாளிகள் அதிகரித்தனர்

0
651

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,455 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இன்றையப் புதியத் தொற்றுகள் குறைந்துள்ள வேளையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 21 உயிரிழப்புகளுடன் மிக உயர்ந்த எண்ணிக்கையைப் பதிவு செய்தது.

“இன்று மரண வழக்குகளில் சிலாங்கூரில் 12, சபாவில் 4, ஜொகூர் மற்றும் கோலாலம்பூரில் தலா 2 மற்றும் கெடாவில் 1 எனப் பதிவாகியுள்ளது.

“இறந்தவர்களில் 20 பேர் மலேசியர்கள், ஒருவர் வெளிநாட்டுக்காரர்,” என்றும் அவர் கூறினார்.

3,661 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்

ளனர். அவசரப் பிரிவில் 327 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 145 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத்

 

தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (1,145), ஜொகூர் (708), கோலாலம்பூர் (619), சபா (276), சரவாக் (121), திரெங்கானு (115), பினாங்கு (85), பேராக் (84), நெகிரி செம்பிலான் (79), பஹாங் (63), மலாக்கா (62), கெடா (59), கிளந்தான் (31), புத்ராஜெயா (6), லாபுவான் (1), பெர்லிஸ் (1).

மேலும் இன்று 7 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 6 பணியிடத் திரளைகள் ஆகும்.