பிரித்தானியாவில் புதிய வீரியம் மிக்க தொற்று… தடுப்பூசிகள் பயன் தராமல் போகலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை

0
3026

தென்னாபிரிக்காவில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று போன்று தற்போது பிரித்தானியாவில் புதிதாக உருமாற்றம் கண்ட தொற்று ஒன்றை கண்டறிந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரித்தானியாவின் Kent பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய உருமாற்றம் கண்ட தொற்றால் இதுவரை 11 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,

குறித்த தொற்றானது தடுப்பூசிகளால் தடுக்க முடியாமல் போகும் வாய்ப்பு அதிகம் என்று நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நோய்த்தொற்றுகள் பரவ அனுமதிக்கப்பட்டால் தடுப்பூசி மற்றும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி என அனைத்தும் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

E484K என குறிப்பிடப்பட்டுள்ள இந்த புதிய உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று, தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் வகை

கொரோனா தொற்றுடன் தொடர்புடையவை எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முதலில் உருமாற்றம் கண்ட இந்த புதிய தொற்றானது பிரித்தானியாவில் இல்லை என்றே கருதப்பட்டது.

ஆனால் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி குறிப்பிட்ட பகுதியில் உள்ள சிலருக்கு இந்த புதிய உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.