தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவரி 5 வரை நடத்த முடிவு

0
486

தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவரி 5 வரை நடத்த, சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது.

ஆளுநர் உரை முடிந்தவுடன், கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் சட்டசபை செயலர் சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், “அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் 5ம் திகதி சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

நாளை அமைச்சர் துரைக்கண்ணு, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், டாக்டர் சாந்தா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டசபை ஒத்தி வைக்கப்படும்.

நாளை மறுநாள் அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் ஆரம்பிக்கப்படும்.

பெப்ரவரி 5ம் திகதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும் பதிலுரையும் இடம்பெறும்.

சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.