உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை தட்டிச்சென்ற தோஹா.!

0
271

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மிகக்குறைவான குற்றவியல் சம்பவங்கள் நடைபெறுவதன் அடிப்படையில் பாதுகாப்பான முதல் 10 நகரங்களின் பட்டியலை நம்பியோணையதளம் வெளியிட்டுள்ளது.அதன் அடிப்படையில், உலகின் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் கத்தார் தலைநகர் தோஹா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

உலகில் உள்ள 431 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நகரங்களின் பாதுகாப்பு மற்றும் அங்கு நடைபெறும் குற்றத்தின் சதவீதம் போன்றவற்றின் அடிப்படையில் தோஹா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

தோஹா பாதுகாப்பு குறியீட்டில் (safety index) 87.96 சதவீதம் பாதுகாப்பான நகரமாகவும், குற்றக் குறியீட்டில் (crime index) 12.04 சதவீதம் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின் முதல் பத்து இடத்தில் அபுதாபி, தைபே, கியூபெக் சிட்டி, சூரிச், ஷார்ஜா, துபாய், Eskisehir, Munich மற்றும் Trieste போன்ற நகரங்களும் இடம்பெற்றுள்ளது.Safe City