இஞ்சி, சுக்கு, கடுக்காய் பற்றி சித்தர்கள் சொன்ன இரகசியம்

0
1495

நாம் சாப்பிடும் உணவில் நன்மைகளோடு நஞ்சும் கலந்திருக்கும். அவைகள் குடலிலேயே தங்கிவிட்டால்தான் பலவித நோய்க்ளுக்கும், மரபுக் கோளாறுகளுக்கும் காரணமாகிறது. நச்சுக்களை அகற்றவும், வாயுக்களை சமன் செய்யவும், இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகிய மூன்றும் சாப்பிட வேண்டும். நமது உடலானது வாதம், பித்தம், கபம் போன்ற வாயுக்களை அடிப்படையாகக் கொண்டது.

இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. இந்த மூன்றையும் சமனமாகிவிட்டால் உடல் சம நிலைப் பெறத் தொடங்கும். இதனால் தேக ஆரோக்கியம் பெறும்.

காலை :

காலையில் இஞ்சிச்சாறு மூன்று ஸ்பூன் எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் :

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.

இரவு:

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும். பல உடல் பிரச்சினைகளை மலச்சிக்கலே காரணமாக அமைகிறது. எனவே, கடுக்காய் தூள் சாப்பிட்டு வர மலச்சிக்கல் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த மூன்றையும் நம் முன்னோர்கள் தவறாமல் சாப்பிட்டு நோயின்றி வாழ்ந்திருக்கிறார்கள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எவ்வளவு தான் வசதி, வாய்ப்புகள் இருந்தாலும் நோயில்லாதிருப்பதே பெரிய செல்வம். இந்த சாப்பிட முயற்சி செய்துப் பாருங்கள். உடல் வளத்தை பெறுவீர்கள்.