மூத்த குடிமக்களுக்கு ஒரு நிபந்தனையுடன் வருமான வரி ரத்து

0
600

பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில்,
வருமான வரி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க புதிய குழு அமைக்கப்படும். சில நிபந்தனைகளின் கீழ் மூத்த குடிமக்களுக்கு வருமான வரி ரத்து செய்யப்படும்.

நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், மூத்த குடிமக்கள் மீதான சுமையை குறைக்கிறோம். ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானம் மட்டுமே உள்ள மூத்த குடிமக்களுக்கு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான இரட்டை வரிவிதிப்பை அகற்றுவதற்கு புதிய விதிகள் கொண்டு வரப்படும்.

நாட்டின் நிதி பற்றாக்குறை 2020-2021 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்றும், 2021-22 ஆண்டில் 6.8 சதவீதமாக ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.