இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பட்ஜெட் – ப. சிதம்பரம்

0
110
2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்,
இந்த பட்ஜெட் தாக்கல் எந்த வகையிலும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இது மக்களைப் பற்றி கவலைப்படாத நிதிநிலை அறிக்கை. நிதிநிலை அறிக்கை உரையைக் கேட்பவர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏமாற்றியுள்ளார்.
இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பட்ஜெட் தாக்கலாக இது அமைந்துள்ளது. எதிர்பார்த்ததைப்போல் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கும் முடிவு மக்களை பாதிக்கும். ஜிஎஸ்டி வரி விதிப்பில் எந்தக் குறைப்பும் இடம் பெறவில்லை. அந்த அறிவிப்புகள் ஒதுக்கீடாகவே உள்ளன. நடைமுறைக்கு வர நீண்ட காலம் எடுக்கும் ப. சிதம்பரம் விமர்ச்சித்துள்ளார்.