சுழல் ஆடுகளத்தில் நீண்ட நேரம் கீப்பராக செயல்படுவது சவாலானது – பென் போக்ஸ்

0
868
இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஜோஸ் பட்லர் விளையாடிய பின்னர் இங்கிலாந்து சென்று விடுவார். 3-வது போட்டிக்குதான் பேர்ஸ்டோவ் திரும்புவார்.
இதனால் 2-வது டெஸ்ட் போட்டியில் பென் போக்ஸ் விக்கெட் கீப்பராக செயல்பட அதிக வாய்ப்புள்ளது. அவர் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நீண்ட நேரம் கவனமாக செயல்படுவது சவாலானது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘இலங்கை அல்லது ஆசிய நாடுகளில் நீண்ட நேரம் மிகவும் கவனமாக செயல்படுவதாக கடினம். பந்து சுழன்ற வரும். அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். மிகப்பெரிய பேட்டிங் ஆர்டர் கொண்ட இந்தியாவுக்கு எதிராக விளையாட ஆர்வமாகவும், எதிர்பார்ப்பாகவும், சற்று தடுமாற்றமாகவும் இருக்கும். கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்ட நாட்டில் விளையாடுவது நம்பமுடியாத இடம். இங்கு வாய்ப்பு கிடைத்தால் சிறப்பானதாக இருக்கும்’’ என்றார்.