கொரோனா வைரஸிற்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கிறது சிறிலங்கா

0
365

கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் நடவடிக்கையை சிறிலங்கா மருத்துவ பரிசோதனை நிறுவனம் தொடங்கியுள்ளது. தடுப்பூசி தயாரிக்கும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பித்ததாக விசேட மருத்துவர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தடுப்பூசி தயாரிப்பதற்கான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார். விசேட மருத்துவர்கள் சபையினால் தடுப்பூசி தயாரித்த பின்னர் அதன் முடிவுகளை பெற்றுக் கொள்வதற்கு ஒரு மாத காலமாகும்.

அந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் சுகாதார சேவை ஊழியர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பிரிவில் இணைந்துள்ள பாதுகாப்பு இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தயாரிக்கப்படும் தடுப்பூசியினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கடந்த வார இறுதியில் பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விசேட மருத்துவர் தெரிவித்துள்ளார்.