மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

0
390

பாரதி ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமனின் மூன்றாவது பட்ஜெட், அதிக சலுகை அறிவிப்புகள் உடையதாக இருக்கும் என்ற, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021 – 2022 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, இன்று தாக்கல் செய்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இரண்டாவது முறையாக அமைந்த பின், தாக்கல் செய்யப்படும் மூன்றாவது பட்ஜெட் இது.

நாட்டின் முதல், முழுநேர பெண் நிதி அமைச்சரான, தமிழகத்தை பூர்வீகமாக உடைய நிர்மலா சீதாராமன், இன்று காலை, 11:00 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்; இது, அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட். கொரோனா வைரஸ் பரவல் உள்ள நிலையில், முதல் முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் ஆவணங்கள் அனைத்தும், ‘டிஜிட்டல்’ மயமாக்கப்பட்டுள்ளன.

கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பில் இருந்து மீட்கும் வகையில், மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு சலுகைகள், திட்டங்களின் தொடர்ச்சியாக இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரியில் தற்போதுள்ள நிரந்தரக் கழிவான, 50 ஆயிரம் ரூபாய் சலுகையை, 1 லட்சம் ரூபாய் வரை உயர்த்த வாய்ப்புள்ளது. கொரோனா வைரசால், மருத்துவக் காப்பீடு வாங்குவது அதிகரித்துள்ளது.