ஸ்ரீ ராம் : தோமஸின் வெளிப்பாடு வழக்குரைஞர்-கட்சிக்காரர் இரகசியத்தை மீறவில்லை

0
592

முன்னாள் தலைமை நீதிபதி தோமி தோமஸ் தனது நினைவுக் குறிப்பில் வெளிப்படுத்தியுள்ள செய்திகள், வழக்குரைஞர்கள்- கட்சிக்காரர்களின் இரகசியக் கட்டுப்பாட்டை மீறியுள்ளது எனும் வாதத்தைச் சட்டத்துறை வல்லுனர் கோபால் ஸ்ரீ ராம் நிராகரிக்கிறார்.

முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ ராம், இந்த அறிக்கையின் வெளிப்பாடு ஆதாரச் சட்டம் 1950-இன் பிரிவு 126-இல் சேர்க்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

மற்றவற்றுடன் பிரிவு 126, வாடிக்கையாளருக்கு ஒரு வழக்கறிஞராக தனது பணிகளைச் செய்யும்போது, அவருக்கு வழங்கப்பட்ட தகவல்தொடர்புகளை வெளிப்படுத்த தனது வாடிக்கையாளரின் சம்மதத்தைத் தவிர வேறு எந்த வழக்கறிஞருக்கும் அனுமதி இல்லை.

எவ்வாறாயினும், வழக்குரைஞர்கள்- கட்சிக்காரர்கள் இடையிலான தொடர்பு சட்டவிரோத நோக்கத்திற்காக செய்யப்படும் சூழ்நிலைகள் அல்லது வழக்குரைஞர் தனது சேவைகளை வழங்கும்போது ஏதேனும் குற்றம் அல்லது மோசடியைப் பார்க்கும் சூழ்நிலைகள் இதில் இல்லை என்றும் அந்தப் பிரிவு கூறுகிறது.

“சட்டத் தொழில்முறை இரகசியம் 1950-ஆம் ஆண்டு ஆதாரச் சட்டத்தின் பிரிவு 126-ஆல் நிர்வகிக்கப்படுகிறது. தோமஸ் வெளிப்படுத்திய விஷயங்களைப் பார்க்கும்போது, ​​இது பிரிவு 126-இன் எல்லைக்குள் இருப்பதாகத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.

“தோமஸ் சொன்னவற்றில் பெரும்பாலானவைப் பலருக்குத் தெரிந்தவையே. எனவே, நான் அதில் எந்தத் தவறும் பார்க்கவில்லை,” என்று ஸ்ரீ ராம் மலேசியாகினியிடம் கூறினார்.

தனது நினைவுக் குறிப்பு புத்தகத்தில் தோமஸின் வெளிப்பாடு குறித்து, வழக்கறிஞர் மொஹமட் ஹனிஃப் காத்ரி அப்துல்லா அளித்த அறிக்கைக்கு அவர் பதிலளித்தார்.

political