மலேசியா: தொடர்ந்து 3வது நாளாக ஐயாயிரத்திற்கும் மேல் தொற்று

0
253

மலேசியாவில் நேற்று  5,298 பேருக்குப் புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 214,959 ஆனது.

அதே சமயத்தில் மேலும் 14 பேர் மாண்டதைத் தொடர்ந்து, அங்கு இதுவரை 760 பேர் தொற்றுக்குப் பலியாகினர்.

ஜோகூர், சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் ஆக அதிகமாக ஆயிரத்திற்கும் மேல் தொற்று சம்பவங்கள் பதிவாகின.