பிரான்ஸின் புகழ்பெற்ற கிராமத்துக்கு 2 மி. யூரோக்களை எழுதி வைத்த வெளிநாட்டு மனிதர்! நெகிழவைக்கும் வரலாற்று பின்னணி

0
200

நாஜி தாக்குதலின் போது தப்பி ஓடி வந்த தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றியதற்காக பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்துக்கு ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த மனிதர் 2 மில்லயன் யூரோக்களை நன்கொடையாக எழுதிவைத்துள்ளார்.

கடந்த டிசம்பர் 25-ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் எரிக் ஸ்வாம் என்பவர் தனது 90 வயதில் மரணமடைந்தார்.

அவரது மரணத்துக்குப் பிறகு அவர் எழுதிவைத்திருந்த உயில் படிக்கப்பட்டது. அதில் இரண்டாம் உலகப் போரின் போது அடைக்கலம் தேடி ஓடிக்கொண்டிருந்த நிலையில், தன்னையும் தனது குடும்பத்தையும் பல ஆண்டுகளாக நாஜிகளிடமிருந்து காப்பாற்றிய லு சாம்பன்-சுர்-லிக்னன் எனும் புகழ்பெற்ற பிரான்ஸ் கிராமத்துக்கு தனது சொத்திலிருந்து 2 மில்லயன் யூரோக்களை நன்கொடையாக எழுதி வைத்துள்ளார்.

இந்த பணத்தை அந்த கிராம குழந்தைகளின் கல்வி மற்றும் இளைஞர் முயற்சிகளுக்கு உதவித்தொகையாக பயன்படுத்துமாறு ஸ்வாம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவத்தை நினைவூட்டி நன்றிக்கடனாக எரிக் ஸ்வாம் செய்த இந்த செயல் நெகிழ்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

தனது 13 வயதில் எரிக் ஸ்வாமும் அவரது குடும்பத்தினரும் 1943-ல் இரண்டாம் உலகப் போரின் பொது Le Chambon-sur-Lignon கிராமத்தில் ஒரு பள்ளியில் மறைத்து வைக்கப்பட்டனர். பின்னர் 1950 வரை அதே இடத்தில் அந்த கிராம மக்களால் பாதுகாக்கப்பட்டர்.

பின்னர் எரிக் ஸ்வாம் மருந்தகம் பயின்றுள்ளார். பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க பெண்ணை மணந்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் பொது Le Chambon-sur-Lignon கிராம மக்கள் சுமார் 2,500 யூதர்களை காப்பாற்றி பாதுகாத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.