கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் மூன்று மாதங்களாக பதுங்கியிருந்த இந்திய வம்சாவளியினர் இவர்தான்

0
321

கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்திலேயே மூன்று மாதங்கள் பதுங்கியிருந்த இந்திய வம்சாவளியினர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆதித்யா சிங் (36) என்னும் அந்த நபர், லாஸ் ஏஞ்சல்சிலிர்ந்து சிகாகோவிற்கு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் விமானத்தில் வந்து இறங்கியிருக்கிறார்.

ஆனால், மீண்டும் லாஸ் ஏஞ்சல்சுக்கு சென்றால் கொரோனா தொற்றிவிடுமோ என பயந்து விமான நிலையத்திலே தங்கிவிட்டிருக்கிறார்.

யாரோ ஒருவர் தவறவிட்ட அடையாள அட்டையை எடுத்து வைத்துக்கொண்டு, விமான நிலையத்திலேயே மறைவான ஒரு இடத்தில் மூன்று மாதங்களாக வாழ்ந்துவந்திருக்கிறார் ஆதித்யா.

பொலிசார் கேட்டபோது தான் ஒரு விமான நிலைய பணியாளர் என்று கூறியிருக்கிறார் அவர்.

அவரை பொலிசார் கைது செய்யும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு வெற்றிகரமான விருந்தோம்பல் துறைப் பணியாளராக வலம் வந்த ஆதித்யா இப்படி கைது செய்யப்பட்டுள்ள தகவல் வெளியானதையடுத்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

அவர் ஒரு அறைக்குள் வந்தாரென்றால் அந்த அறையே பிரகாசமாகிவிடும், அப்படி ஒரு முன்மாதிரியான விருந்தோம்பல் துறைப் பணியாளராக இருந்தவர் ஆதித்யா என்கிறார் அவருடன் பணியாற்றிய Katherine Ruck என்பவர்.