காதலியுடன் தனிமையில் இருந்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி! சிக்கிய பின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம்

0
734

இந்தியாவில் காதலியுடன் நெருக்கமாக இருந்த போது, கையும் களவுமாக சிக்கிய கணவன், தன் தவறை உணர்ந்து என்னை மன்னித்துவிடு என்று கூறி மனைவியின் காலில் விழுந்து கதறி அழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துராஜ்(40). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் முத்துராஜுக்கும், கம்பாபுராவை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது.

இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இது குறித்து தகவல் முத்துராஜின் குடும்பத்தினருக்கும், லட்சுமியின் குடும்பத்தினருக்கும் தெரிய வர, அவர்கள் இருவரையும் கண்டித்தனர்.

இருப்பினும், இருவரும் அதை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

இதையடுத்து, நேற்று முத்துராஜ் மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் தார்வார் தாலுகா முகதா கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள ஒரு வீட்டில் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த முத்துராஜின் மனைவி மற்றும் குடும்பத்தார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துராஜையும், அவரது காதலியையும் கையும், களவுமாக பிடித்தனர்.

பின்னர் இதுபற்றி அவர்கள் தார்வார் டவுனில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் பொலிசார் விசாரணை நடத்தினர். பின்னர் முத்துராஜிக்கு போலீசார் அறிவுரை வழங்கி மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கூறினர்.

இதனால் மனம் திருந்திய முத்துராஜ் மனைவியுடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டார். பின்னர் தான் செய்தது தவறு என்று உணர்ந்த முத்துராஜ், தனது மனைவி மற்றும் பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள், பொலிசார் மற்றும் அவ்வழியாக வந்து சென்றோரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

அப்போது அவர், நான் தவறு செய்துவிட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என்று காலில் விழுந்து கதறி அழுதார். இந்த

வீடியோ சமூகவலைத்தளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது.

குறிப்பாக அவர் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.

அவரின் இந்த செயல் மகளில் போலீஸ் நிலைய வளாகத்தில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. பின்னர் முத்துராஜ் தனது மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.