புது வீடு கட்டினார் நிக்கி கல்ராணி

0
14

மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் யாகாவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்டசிவாகெட்டசிவா, கலகலப்பு2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இன்றுடன் அவர் திரையுலகில் வந்து ஏழு வருடங்கள் ஆகிறது.

நிக்கி கல்ராணி புது வீடு கட்டி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் அந்த வீட்டில் பால் காய்ச்சி, புதுவீட்டில் குடிபுகுந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படங்களை நிக்கி கல்ராணி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது