நேர்மையின் மறுபெயராக விளங்கும் ஆட்டோ டிரைவர்

0
8

சென்னை – குரோம்பேட்டையிலுள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பால் பிரைட் (வயது 57). மளிகை கடை நடத்தி வரும் இவரது மகனுக்கு கடந்த 27 ஆம் தேதி திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த பின், 50 பவுன் நகை மற்றும் ஒரு பட்டுப் புடவையை ஒரு பையில் எடுத்துக் கொண்டு, ஆட்டோவில் பால் பிரைட் தனது வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்ற பின் தான், ஆட்டோவிலேயே நகை பையை மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்திருக்கிறார்.

நேர்மையான அந்த ஆட்டோ டிரைவர், ஆட்டோவில் இருந்த நகைப்பையை வீட்டில் சென்று கண்டதும், இவர் தான் நகையை வைத்து சென்றிருப்பார் என அவதானித்து, பால் பிரைட்டின் வீட்டிற்கே சென்று நகை பையை ஒப்படைத்தார். பின் போலீசுக்கும் அவரே தகவல் தெரிவித்தார்.