ஓடிடியில் வெளியாகிறது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’

0
513

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த வருடமே ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது.

தற்போது இந்த படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெட்பிளிக்ஸில் இப்படம் வெளியாக உள்ளது.

தனுஷ் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்ற செய்தி ரசிகர்களிடையேயும், திரையுலகினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.