கனடாவில் 20 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா உயிரிழப்பு

0
422

கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் நான்காயிரத்து 255 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் 148 இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட மொத்த மரணங்கள் 19 ஆயிரத்து 942 ஆகப் பதிவாகியுள்ளது. இதுவரை மொத்தமாக ஏழு இலட்சத்து 74 ஆயிரத்து 722 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஏழு இலட்சத்து 924 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மொத்தமாக இதுவரை இரண்டு கோடியே 19 இலட்சத்து 73 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் ஒன்பது இலட்சத்து 52 ஆயிரத்து 212 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.