பேருந்து-லாரி மோதல்: ரஷியாவில் 12 பேர் உயிரிழப்பு

0
422

ரஷியாவில் பேருந்துடன் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனா். ரஷியாவில் மத்தியில் உள்ள சமாரா பகுயில் இந்த விபத்து வெள்ளிக்கிழமை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்துடன் மோதியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார்தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.