விளாடிமிர் புடின் மாளிகைக்கு உரிமை கொண்டாடும் செல்வந்தர்

0
59

கருங்கடல் கரையோரத்தில் அமைந்துள்ள 1.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள அரண்மனை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்குச் சொந்தமில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய பெரும் செல்வந்தரான அர்காடி ராட்டன்பெர்க் குறித்த அரண்மனையை தன்னுடையது என்று கூறியுள்ளார்.

கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நேவல்னி எழுதிய அரண்மனை பற்றிய வீடியோ அறிக்கையில், இந்த அரண்மனை புடினுக்குச் சொந்தமானது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய பெரும் செல்வந்தரும் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான அர்காடி ராட்டன்பெர்க், இந்த அரண்மனையை தன்னுடையது என கூறியுள்ளார்.

ரஷ்யா முழுவதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை தீவிரமடைந்து வரும் நிலையில் அவரது இந்த கருத்து வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.