விசேட அறிவிப்பு ! இலங்கையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்

0
209

தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் -19 தொற்று பரவலைத் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளை (01) அதிகாலை 5.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் 100ஆவது தோட்டம் இவ்வாறு விடுவிக்கப்படுகின்றது.

அத்துடன் கொழும்பு துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனித அன்றூஸ் கீழ் பிரிவு மற்றும் புனித அன்றூஸ் மேல் பிரிவு, அன்றூஸ் வீதி ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.

இதேவேளை, பேலியகொடை பொலிஸ் பிரிவில் கங்கபட கிராம அலுவலகர் பிரிவின் 90 ஆவது தோட்டமும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.