பிரித்தானியாவில் பலரின் உயிரை காப்பாற்றும் பணியில் இருந்த தமிழர் மரணம்! அமைதியான சுபாவம் கொண்டவர் என புகழாரம்

0
68

பிரித்தானியாவில் தமிழரான மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவர் குறித்து சக மருத்துவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

இந்திய தமிழரான கிருஷ்ணன் சுப்ரமணியன் (46) பிரித்தானியாவின் Royal Derby மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார், பலரது உயிரை காப்பாற்றும் பணியில் அவர் இருந்தார்.

இந்த நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் Leicesterல் உள்ள கிள்ன்பீல்ட் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அதே மாதத்தில் சிகிச்சை பலனின்றி சுப்ரமணியன் உயிரிழந்தார். இந்த நிலையில் அவர் குறித்த நினைவ

லைகளை சக மருத்துவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மருத்துவ அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி காவின் போயல் கூறுகையில், கவனிப்பு தேவைப்படுபவர்களுக்கு ஆதரவாக சுப்ரமணியன் கடுமையாக உழைத்தார்.

சுப்ரமணியனை இழந்தது சந்தேகத்துக்கு இடமின்றி எங்கள் ஊழியர்கள் அனைவரையும் பாதித்துள்ளது என கூறியுள்ளார்.

சுப்ரமணியமுடன் பணியாற்றிய சக மருத்துவர் ஜான் வில்லியம்ன்ஸ் கூறுகையில், தனது பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்த

 

அவர், பயிற்சி மருத்துவர்களுடன் அயராமல் பணியாற்றினார்.

அவர் பெரும்பாலும் பரபரப்பாக பணிபுரியும் சூழலில் இருந்தார்.

அமைதியான சுபாவம் கொண்ட சுப்ரமணியனின் குணங்களை அவருடன் பணியாற்றிய மருத்துவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என உருக்கமாக கூறியுள்ளார்.